நீங்க இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வாகுமா
உம்மைத் தேடாத நாளும் ஒரு நாளாகுமா

இயேசைய்யா இயேசைய்யா
உம் பிள்ளை நானைய்யா

உம்மோடு நடந்தால் ஆனந்தம்
உம்மோடு இருந்தால் பேரின்பம்
நன்மையினால் என் வாயை நிரப்பும்
நல்லவரே என் ஏசைய்யா

உம் வசனம் எனக்கு ஆனந்தம்
உம் சமூகம் எனக்கு பேரின்பம்
வார்த்தையினால் என் வாழ்வு வளமாக்கும்
வல்லவரே என் ஏசைய்யா

உம் சத்தம் எனக்கு ஆனந்தம்
உம் சித்தம் எனக்கு பேரின்பம்
சித்தம் செய்த சீயோனில் சேர
சுத்தம் செய்யும் என் ஏசைய்யா

DOWNLOAD PPT


Keywords: neenga illatha vazhvum oru vazhvaguma lyrics, neenga ilatha oru valvum lyrics ppt in tamil, anathi sneham, anathi shneham songs.