சித்தம் உம் சித்தம்
அது ஒருபோதும் மாறாது
மாற்றமேயில்லை அது மாறுவதில்ல
சத்தம் உம் சத்தம்
உம் சித்தத்தை நினைப்பூட்ட
மறப்பதேயில்ல அது மறந்ததில்லை-2

நான் போகும் பாதைகள்
முரண்பாடாயிருந்தாலும்
இலக்கிற்கு தடையே இல்ல
திட்டத்தின் மையத்தில்
நீர் என்னை வைத்ததால்
சறுக்கில்லை முன்னே செல்ல

யாக்கோபைப்போல எத்தனாக வாழ்ந்ததும்
யோசேப்பை போல குழியிலே வீழ்ந்ததும் - 2

வாழ்ந்தவர் வீழ்ந்தாலும் கையில் எடுப்பீர்
வீழ்ந்தவர் வாழ்ந்ததாக மாற்றி அமைப்பீர்
திட்டம் வைத்தீரே என்னை இஸ்ரவேலாய் மாற்றிட
சித்தம் கொண்டீரே என்னை அரியணையில் ஏற்றிட
உமது திட்டங்கள் தோற்பதில்லை-சித்தம்

2.மோசேயைப்போல எகிப்திலே இருந்ததும்
தானியேலைப்போல பாபிலோனில் வளர்ந்ததும் - 2

வளர்ந்ததின் காரணம் அறிந்து கொண்டேன்
வளர்த்தவர் யாரென்றும் புரிந்து கொண்டேன்
திட்டம் வைத்தீரே என்னால் இஸ்ரவேலை மீட்டிட
சித்தம் கொண்டீரே என்னால் உம் நாமம் உயர்ந்திட
உமது தரிசனங்கள் தோற்பதில்லை-சித்தம்

DOWNLOAD PPT


Search Keywords: sitham um sitham song lyrics, satham um satham song, john jebaraj song lyrics, ppt, tamil christian song lyrics ppt,