ஆசீர்வாத மழை பொழியும் காலம் இதுதானே
ஆவியானவர் காற்றாய் வீச பெருமழை பெய்திடுமே
உன்னதத்திலிருந்து உன்மேல் ஆவியை ஊற்றிடுவார்
உலர்ந்துபோன உன்னை இயேசு உயிர் பெறச் செய்திடுவார்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் நேரமிது
உன் கவலை கண்ணீர் முற்றிலுமாய் விலகும் நேரமிது

முன்மாறியும் பின்மாறியும் சீராய் பொழிந்திடுவார்
காய்ந்திருந்த உந்தன் வாழ்வை கனியாய் நிரப்பிடுவார்
தரிசாய்க் கிடந்த உந்தன் நிலத்தை விளையச் செய்திடுவார்
உன் கை செய்யும் வேலை எல்லாம் ஆசீர்வதித்திடுவார்

வனாந்திரம் வயல்வெளியாக மாறும் நேரமிது
அவாந்திரம் ஆறுகளாக பாயும் காலமிது
சொப்பனத்தாலும் தரிசனத்தாலும் இயேசு இடைபடுவார்
தீர்க்கதரிசியாய் உன்னை மாற்றி அவரே வெளிப்படுவார்

பெருமழை ஒன்று பெய்யும் நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்
பெருமழை ஒன்று பெய்யும் நம் தேசத்தின் மீது பெய்யும்
ஆவியானவர் மழையாய் பொழிந்திடுவார்
ஆசீர்வாத மழையைப் பொழிந்திடுவார்

DOWNLOAD PPT

Aasirvadha Malai Poliyum Lyrics PPT - Jesus Calls

Keywords: jesus calls, aasirvatha malai poliyum song, aasirvadha mazhai pozhiyum song lyrics in tamil, ppt