கர்த்தருக்கு காணிக்கை தாருங்கள் அவர்
கணக்கில்லாமல் திருப்பி தருவார்
ஊழியத்திற்கு உதவி செய்யுங்கள் அவர்
உங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பார்
உலக செல்வம் அனைத்தையுமே
உருவாக்கியவர் உனக்காக
யாவற்றையும் தத்தம் செய்தவர்
தனக்கான தருபவரை தாங்கி நடத்துவார்
தசம தாகம் அளிப்பவரை
தழைக்க செய்குவார்
அன்புடனே தருபவரை ஆதரிப்பவர்
அளவில்லாமல் அவர்களுக்கே
அள்ளி கொடுப்பவர்
ஏழ்மையிலும் தருபவரை
இயேசு மதிப்பார் இம்மையிலும்
மறுமையிலும் ஆசீர்வதிப்பார்
பத்தில் ஒன்று தருபவரை பரமன்
பார்க்கிறார் தன் பலனின் முதலை
தருபவரை பார்த்து மகிழ்கிறார்
பாசத்துடன் இயேசு தேவன்
உன்னை கேட்கிறார்
தந்தால் தலகணையை
திறந்து உம்மை ஆசீர்வதிக்கிறார்
விண்ணும் வெளியும் தன்னுடையது
என்று கர்த்தர் சொல்கிறார் அதை
என்னுடையது என்பவரை
இயேசு வெறுக்கிறார்
பொய்யுலக செல்வமதை
பூச்சி அரித்திடும் உன்
பொக்கிஷத்தை பரலோகத்தில்
சேர்த்து வை என்றார்
பொற்தள வீதி அதை மிதித்து
நடப்பவர் இப்பூமியிலே பொன்
நகைகளை வெறுத்து ஒதுக்குவார்
புண்ணியராம் இயேசு பணி
புவியில் நடக்கவே தன் பொன் பொருளை
வழங்கிடுவோர் மோட்சம் சேருவார்
Search Keywords: kartharukku kanikkai thaarungal lyrics, kartaruku kanikai tarungal, kartharukku kaanikkai thaarungal lyrics in tamil