முன்னேறிச் செல் பின்னிட்டுப் பார்க்காதே
தொடர்ந்து ஓடு தொடங்கினவர் முடிப்பார்

கற்கள் முட்கள் பாதையிலே
கதறி நீயும் அழுகையிலே
கடந்து வந்து தேற்றிடுவார்
காலம் எல்லாம் உடனிருப்பார்

மனிதர் எல்லாம் கைவிட்டாலும்
பாதி வழியே விட்டு விட்டாலும்
பாதை காட்டும் தீபமவர்
பாதை காட்டி நடத்திடுவார்

சுமைகள் சுமந்து சோர்கையிலே
சுமைகள் எல்லாம் தாங்கிடுவார்
பாவ வாழ்வில் உழல்கையிலே
பாசம் கொண்டு கழுவிடுவார்

வியாதிகளை நீக்கிடும் கரமல்லவோ
வேதனை நீக்கிடும் கரமல்லவோ
ஆணிகளை ஏற்றுகொண்ட கரமல்லவோ
ஆறுதல் செய்திடும் கரமல்லவோ

DOWNLOAD PPT

Munneri Sel Munneri Sel Lyrics PPT


Search description: munneri sel muneri sel song lyrics ppt, song lyrics in tamil, munerisel munerisel song lyrics in tamil