அக்கினி மூண்டது அனல் கொண்டது
என் இதயம் தியானம் செய்கையில்
அக்கினி அக்கினி
பரலோக பரிசுத்த அக்கினி
பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி
இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார்
பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும்
எரிந்து கொண்டே இருக்க வேண்டும்
அதிசய அக்கினி, அழைப்பு விடுக்கும் அக்கினி
அசுத்தம் நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி
சுட்டெரிக்கும் அக்கினி சுத்திகரிக்கும் அக்கினி
பரிசுத்த ஸ்தலமாக்கும் தூய அக்கினி
வழிநடத்தும் அக்கினி வாழ வைக்கும் அக்கினி
போகும் பாதை காட்டுகின்ற புனித அக்கினி
வெளிச்சம் தரும் அக்கினி விலகாத அக்கினி
வேண்டுதல் செய்யும் போது இறங்கும் அக்கினி
பர்வதங்கள் எல்லாம் மெழுகுபோல உருகிடும்
பரிசுத்த தூய அக்கினி முன்னால்
சுற்றிலும் இருக்கின்ற எதிரியின் கிரியைகளை
அக்கினி முன் சென்று அகற்றுகின்றது
தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று
ஆவியானவர் அக்கினியாய் இறங்கி வந்தார்
கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
ஆர்ப்பரித்து ஜனங்கள் மனம் திரும்பினார்கள்
Search description: akkini moondathu, akkini mondathu song lyrics, father berchmans, song lyrics in tamil, akkini moondathu ppt, lyrics in tamil, jebathotta jeyageethangal.