என் உயர்ந்த அடைக்கலமே
நான் நம்பும் கேடகமே
ஆபத்தில் அனுகூலமே
கைவிடாத கன்மலையே
கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே
உங்க கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே
முகாந்திரம் இல்லாமல் ஒன்றுமே நீர் செய்வதில்லை
சொன்னதை செய்வதில் உமக்கு நிகர் யாரும் இல்லை
அற்பமான ஆரம்பம் அற்புதமாய் மாறிடுமே
அடைக்கப்பட்ட வாசல்கள் இன்றைக்கே திறந்திடுமே
தீங்கு என்னை அணுக விடமாட்டீர்
தீங்கு என்னை நெருங்க விடமாட்டீர்
தேவைகளின் மத்தியிலும் காத்திருப்பேன் பொறுத்திருப்பேன்
உம் மகிமை விளங்கும்வரை பாதத்திலே நிலைத்திருப்பேன்
துன்பமான நேரங்கள் இன்பமாக மாறிடுமே
இடிந்துபோன உன் வாழ்க்கை அலங்கமாய் எழும்பிடுமே