பரலோக அக்கினியே வாரும்
பரிசுத்த அக்கினியே வாரும்
எழுப்புதலை நாங்கள் கண்டிட
இன்றே இறங்கி வாரும்
சீனாய் மலையினிலே
அக்கினியாய் வந்தீர்
இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம்
உம் மகிமையை காணச் செய்தீர்
அக்கினியாய் இறங்கிடுமே ஆவியானவரே
நாங்கள் ஜெபிக்கின்றோம் இயேசுவின் நாமத்தில்
எலியாவின் ஜெபத்தினால் அக்கினி இறங்கினதே
கர்த்தரே தெய்வம் என்று ஜனங்கள் பணிந்தனரே
பரலோக அக்கினியால் தொட்டீரே ஏசாயாவை
எங்களை தொட்டருளும் ஊழியம் செய்திடவே
பெந்தெகொஸ்தே நாளினிலே அக்கினியாய் வந்தீர்
பின்மாரி அபிஷேகம் பெருமழையாய் பொழிந்தீர்