Yesu Vandhale Song Lyrics PPT
எங்கள் இயேசு வந்ததால்
என் வாழ்க்கை மாறிடுச்சு
எங்கள் இயேசு தொட்டதால்
என் பாவம் நீங்கிடுச்சு-2
இயேசு வந்தாலே
என்னோடு நின்றாலே
வாழ்க்கை மாறுமே
எல்லாம் நடக்குமே-2
1.பாவியாய் ஒதுக்கப்பட்டேன்
மிக அற்பமாய் எண்ணப்பட்டேன்
பிள்ளையாய் கரம்பிடித்தீரே
என்னை அரியணை ஏற்றினீரே-2
உலகமே எதிர்த்து நின்றாலும்
விட்டு விலகலையே
உறவுகள் தள்ளி வச்சாலும்
என்னை தள்ளி வைக்கலையே
நீங்க என்னை மறக்கவில்லை
அணைத்தீர் அன்பின் கரத்தால்-2-இயேசு
2.தூரம் போன என்னை உந்தன்
அன்பால் கட்டி இழுத்தீர்
கரத்தால் ஆசீர்வதித்து
என் எல்லையை விரிவாக்கினீர்-2
ஒன்றும் இல்லா எனக்குள்ளே
உந்தன் பாடல் தந்தீர்
செல்லா தேசங்கள் எல்லாமே
உம்மை பாட வைத்தீர்
அற்பமான என்னையுமே
அணைத்தீர் அன்பின் கரத்தால்-2-இயேசு