காக்கைகளை கவனித்துப் பாருங்கள்
மற்ற பறவைகளை கவனித்துப் பாருங்க
அவை விதைக்கிறதும் இல்லை
அவை அறுக்கிறதும் இல்லை
பரம பிதா போஷிக்கிறார்

ஆகாயத்து பறவைகளை போஷிக்கும் தேவன்
உன்னையும் என்னையும் நடத்திடுவார்
கலங்காதே கலங்காதே
உனக்காக யாவையும் செய்திடுவார்

எதைக் குறித்தும் மகனே நீ கவலைப்படாதே
இயேசப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்
நீதிமானின் சந்ததி என்றும்
அப்பத்திற்காக அலைந்து திரிவதில்லையே

பறவைகளைக் காட்டிலும் நீ விஷேசமானவன் பரலோக
பரலோக பொக்கிஷத்தை உனக்கு தருவார்
பயப்படாதே பயப்படாதே
எலியாவை போஷித்தவர் உன்னையும் போஷிப்பார்

புசிப்பதும் குடிப்பதும் தேவராஜ்யம் அல்ல
இயேசுவுக்காய் அனுதினமும் உழைத்திடுவோம்
உழைத்திடுவோம் செயல்படுவோம்
இந்தியாவை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்


Kaakkaigalai Kavanithu Paarunga lyrics ppt