Kangal Lyrics | Jasinthan | Giftson Durai | Nivetha Kaneshaiah
கண்களால் சுத்தி சுத்தி பார்க்கும் வேலையில
திகைத்து போகின்றோமே கர்த்தரின் படைப்புல
கண்கள் சுத்தி சுத்தி பார்க்கும் வேலையில
திகைத்து போகின்றோமே கர்த்தரின் படைப்புல
மலைகள் குன்றுகள் அதை நாம் பார்க்கும் போதெல்லாம்
அவர் வார்த்தை வல்லமை அதை நாம் அறிந்து கொள்ளலாம்
எட்டு திசை தூரம் எல்லாம் கணக்கும் போதெல்லாம்
அவர் அன்பின் நீளத்தை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்
அடடா வண்ண வண்ண பூக்களை பாரு
அழகாய் அவைகளை படைத்தது யாரு
மகிழ்ந்தே பறக்கின்ற பறவையின் அழகு
ஒருமுறை அது பாடும் சங்கீதம் கேளு
தேவன் தாம் நம்மை காண்கிறார் என்று
சொல்லிடும் நற்செய்தி நமக்கு இன்று
இவைகளை கண்டு நாமும் நம்பிக்கையோடு
வென்றிடுவோம் நாம் எல்லாம் நேசர் நம்மோடு
ஒவ்வொன்றிற்கும் இருக்குதம்மா ஒவ்வொரு பருவம்
நித்தம் நம்மை தீண்டிடும் தென்றலை அறிவோம்
இன்பம் வரும் துன்பம் வரும் மாறி மாறி
எது நம்மை அசைத்திடும் தேவனை மீறி
கரை இல்ல அவரின் அன்பு கடலில
பயணம் போகின்றோமே வாழ்க்கை படகில
படைத்தவர் கரங்களின் அதிசயங்களை
கண்ட பின் சந்தேகங்கள் நியாயமே இல்லை
Keywords: Kangal Lyrics. Jasinthan. Giftson Durai. Nivetha Kaneshaiah - in Tamil