Ummai Nesikka En Oru Ithayam | உம்மை நேசிக்க என் ஓர் இதயம் | Lyrics PPT
உம்மை நேசிக்க என் ஓர் இதயம்
போதாது இயேசுவே போதாது இயேசுவே
ஓர் ஆயிரம் இதயம் இருந்தாலும்
அதை உமக்கே நான் தருவேன்
உம் பேரன்பின் தியாகத்திற்கு அது
போதாதென்றறிவேன்
என் நினைவெல்லாம் நீர் வேண்டும் இயேசுவே
என் வாழ்வெல்லாம் நீர் போதும் இயேசுவே
திருக்குள்ள கேடுள்ள இதயத்திலே
இடம் தான் கேட்டீரோ அதை ஏன் தான் கேட்டீரோ
ஆயுள் சக்கரத்தை கொளுத்தும் என் நாவிலே
துதி தான் கேட்டீரோ அதை ஏன் தான் கேட்டீரோ
பாரமுள்ள பாடுள்ள வாழ்க்கையிலே
துணையாய் வந்தீரோ உள்ளத்தில் இடம் தான் கேட்டீரோ
பரலோகில் தூதர்கள் துதியுடன் காத்திருக்க
ஏன் தான் தெரிந்தீரோ என் துதியில் பிரியம் கொண்டீரோ