இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே
இயேசுவின் இரத்தம் எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்
பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே
பரிசுத்தர் சமுகம் அருகில் செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே
ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திரும் திரு இரத்தமே
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே
வாதை வீட்டிற்க்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே
புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே