உம்மைப் போல் உலகில் யாருமில்லை உம் அன்பிற்கு ஈடு இணையில்லை வானம் பூமி யாவையும் உம் வார்த்தையால் படைத்தீர் என்னை மீட்க தம் உயிரை சிலுவையில் கொடுத்தீர் - 2 அழகே ஆருயிரே அன்பே என் இயேசுவே கண்ணீரைப் பார்க்க அநேகர் உண்டு ஆனால் நீரோ கண்ணீர் துடைக்கின்றீர் என் விழுகையை தூசிக்க அநேகர் உண்டு ஆனால் நீரோ குணிந்து தூக்கி விடுகிறீர் கண்ணீரை ஆனந்தக் கழிப்பாய் மாற்றி உம் தோழ்களில் என்னை தூக்கி சுமந்து கொண்டீர் - 2 நம்பினோர் என்னை விட்டு விலகினாலும் நீர் என்னை கைவிடுவதில்லை உறவுகள் என்னை மறந்து ஒதுக்கினாலும் நீர் என்னை என்றும் என்றும்மறப்பதில்லை நம்பினோரை வாழ வைக்கும் தெய்வம் நீரே நான் கூப்பிட்டால் ஓடி வந்து பேசுவீரே