Yaridathil Poven Irava | Valvu Tharum Varthai Lyrics ChristPPT

யாரிடத்தில்  போவேன்  நான்  இறைவா
உம்மையன்றி  யாருண்டு  தேவா
துதிகளின்  பாத்திரரே
ஸ்தோத்திர  பாத்திரரே
மகிமைக்கு  பாத்திரரே
உம்மையன்றி  யாருண்டு  எனக்கையா


1.வாழ்வு  தரும்  வார்த்தையெல்லாம் உம்மிடமே    உள்ளதையா
வாழவைக்கும்   உந்தன்  முகம்  தினம் தினம்  பார்ப்பேனையா
கூப்பிடும்  காக்கைகளை    போஷிக்கும்  என்  தெய்வமே
கூப்பிடும்  எளிய    என்னை  மறவாத  என்  நேசரே   (துதி )


2. கண்களை  கண்ணீருக்கும்  கால்களை இடர்களுக்கும்
தப்புவிக்கும்  எந்தன்  தேவன்  உயிரோடு     இருக்கின்றீர்
கண்ணீரை    கணக்கில்     அல்லோ    வைத்து  இருக்கிறீர்
அலைச்சல்கள்    யாவையும்   அறிந்தே   இருக்கிறீர் (துதி


3.எந்தன்   தேவையெல்லாம்   உமக்கு தெரியுமையா
எந்தன்   குறைவு   எல்லாம்  நிறைவாக்கி தாருமையா
உமது  கைதிறக்க   நான்   அதை  வாங்கிக்   கொள்வேன்
நன்றி  நன்றி  என்று  நாளெல்லாம்   சொல்லிடுவேன்  (துதி )