அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2


விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2

அறுவடை உண்டு அறுவடை உண்டு

நீ கைவிடப்படுவதில்லையே

நீயோ வெட்கப்படுவதில்லையே-2


1.வறண்ட நிலங்களெல்லாம்

செழிப்பாய் மாறிடுமே-2

வாடின என் வாழ்வை 

வர்த்திக்க செய்பவரே-2


வறட்சியை காண்பதில்லையே

நீயோ வறட்சியை காண்பதில்லையே

அறுவடை உண்டு அறுவடை உண்டு

நீ கைவிடப்படுவதில்லையே

நீயோ வெட்கப்படுவதில்லையே-2


2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்

இரட்டிப்பாய் வந்திடுமே

கண்ணீரில் விதைத்ததெல்லாம்

விளைச்சலாய் மாறிடுமே


விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்

நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்

அறுவடை உண்டு அறுவடை உண்டு

நீ கைவிடப்படுவதில்லையே

நீயோ வெட்கப்படுவதில்லையே-2-அதிசயமானவர்