இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்
இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்
எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் - நீ
இருமடங்காய் இன்றே தந்திடுவார்
ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா
அற்புதம் அதிசயம் செய்திடுவார்
ஆனந்த புது வாழ்வு தந்திடுவார்
கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கவலைகள் போக்கி மகிழச்செய்வார் - ஹாலேலூயா
மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும்
நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும்
தீமைகள் எல்லாமே மாறி விடும்
தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் - ஹாலேலூயா
ஆவியின் வரங்களை தந்திடுவார்
அபிஷேக அருள்மழை ஊற்றிடுவார்
உலகினில் சாட்சியை வாழ்ந்திடவே
உன்னத ஆவியை பொழிந்திடுவார் - ஹாலேலூயா